R.Maheshwary / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
ஹட்டன் நகரிலுள்ள சில பேக்கரிகளில் குறைந்த நிறையுடைய பாண் விற்பனை செய்யப்படுவதால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துவருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
450 கிராம் நிறையில் இருக்க வேண்டிய ஒரு இறாத்தல் பாண், சில பேக்கரிகளில் 350 முதல் 375 கிராம் நிறையில் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாண் மாத்திரமன்றி சில பேக்கரிகளில் உற்பத்தி செய்யப்படும் பணிஸ்களின் நிறையும் குறைந்துள்ளதாகவும் அதன் காரணமாக சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
குறைந்த நிறை கொண்ட பாண் மற்றும் பணிஸை விற்பனை செய்து அப்பகுதி மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் பேக்கரி உரிமையாளர்கள் மீது உரிய அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .