2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஹட்டனில் மாணவனுக்குக் கொரோனா

Nirosh   / 2021 ஜனவரி 16 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

ஹட்டன் நரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்களென 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தரம் 10 இல் கல்வி பயிலும் ஹட்டன் நகரப்பகுதியை சேர்ந்த மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குறித்த மாணவனின் தந்தை கொழும்பிலிருந்து வந்தபோது, அவருக்கு  கினிகத்தேனை கலுகல சோதனைச்சாவடியில் மேற்கொண்ட பிசிஆர் பரிசோனையில் தொற்று உறுதியானதையடுத்து, அவரை கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்துக்கும்,  அவரது குடும்பத்தினருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையிலே அவரது மகனான குறித்த மாணவனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X