Editorial / 2023 நவம்பர் 01 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் நகரின் பெயரைப் பயன்படுத்தி வாகனங்கள் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, வாகனங்களை பரிசோதிக்கும் முன் முன்பணம் வசூலிக்கும் மோசடி ஹட்டன் பகுதியில் இடம்பெற்று வருவதாக ஹட்டன் பிரதேச சமூக வலைத்தள பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் அதிக மதிப்புள்ள வாகனங்களின் படங்களை வெளியிட்டு, மிகக் குறைந்த விலையில் வாகனங்கள் விற்கப்படுவதாக விளம்பரம் செய்கின்றனர். விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு வாகனம் வாங்குபவர்கள் அழைத்து, வாகனம் குறித்த தகவல்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.
வாகனம் ஹட்டனில் உள்ள வீடொன்றில் உள்ளது. வாகனத்தை பரிசோதிக்கும் முன், வங்கிக் கணக்கில் முற்பணம் செலுத்துமாறு விளம்பரம் செய்தோர் கூறுவதாக, அழைப்பை எடுத்தவர்கள் கூறுகின்றனர்.
குறித்த வாகனம் இருக்கும் இடம் தொடர்பில் விளம்பரம் செய்த நபரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் வாகனம் வாங்க வந்தவர்கள் அப்பகுதியில் வாகனம் இல்லாததை கண்டுபிடித்துள்ளனர்.
ஹட்டன் பிரதேசத்தில் வீடுகள், காணி, வாகனங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் விற்பனைக்கு உள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை சரிபார்க்காமல் வங்கிகளில் முன்பணத்தை வைப்பதை தவிர்க்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ
30 minute ago
59 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
59 minute ago
1 hours ago
3 hours ago