2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளை வழமைபோல் இயங்கும்

R.Maheshwary   / 2022 ஜூன் 19 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் வழமைப்போல நாளை , இயங்கும் என வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சத்தியேந்திரா தெரிவித்துள்ளார். 

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் நாளை 20ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டுமா ? இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் அநிவிப்பொன்று விடுத்துள்ள நிலையில், ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளின் நாளைய செயற்பாடு எத்தகையதானது என  வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

எரிபாருள் தட்டுப்பாடினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியினால் அரசாங்கம், ஆசிரியர்கள்-மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் சில நடைமுறைகளை விதித்துள்ளது. 

குறிப்பாக நகர்ப்புற பாடசாலைகளை மூடுமாறும் அறிவிக்கப்பட்டிருந்தது. கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சை  வினாத்தாள் திருத்தப்பணிகள் இடம்பெறும் ஹட்டன் நகர பாடசாலைகளான ஹைலன்ஸ் கல்லூரி, சென். பொஸ்கோ கல்லூரி ஆகியன திருத்தப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் குறித்த வலயத்திற்குட்பட்ட ஏனைய பாடசாலைகளுக்கு வருகைதந்து கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களும் கற்கக் கூடிய மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளித்து கற்றலில் ஈடுபடுமாறு அறிவித்துள்ளோம். 

வருகை தர சிரரமாக உள்ள மாணவர்களுக்கு இணையவழியின் ஊடாக குறித்த பாடநெறிகளை நடத்துவதற்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஹைபிரிட் முறையிலேயே நாளைய கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X