Freelancer / 2023 செப்டெம்பர் 02 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.பிரபா
கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவளை பகுதியில் இன்று காலை மரம் ஒன்று வீதியின் குறுக்கே சரிந்து வீழ்ந்ததன் காரணமாக ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - கண்டி வீதியில் போக்குவத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை இப்பகுதியில் பெய்த கடும மழையை தொடர்ந்து குறித்த மரம் சரிந்து வீழ்ந்துள்ளதுடன், குறித்த மரம் வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளது.
முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய வாகனங்கள் ஆபத்தின் மத்தியிலும் மரத்தின் கீழ் வீதியை கடக்க முடிவதுடன் ஏனைய வாகனங்களுக்கு வீதியை கடக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இதன் காரணமாக இந்த வீதியூடான போக்குரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகளை தற்காலிகமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாரும் மரத்தினை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். R

8 minute ago
18 minute ago
32 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
32 minute ago
44 minute ago