Editorial / 2019 ஜூன் 02 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
6. ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன்- டிக்கோயா நகர சபைக்கு கீழ் நிர்வகிக்கப்படும் ஹட்டன்- டன்பார் மைதானத்தில் தகனக் கிரியைகளை முன்னெடுக்க வேண்டாமென, ஹட்டன் வலய பாடசாலை மாணவர்களும், ஹட்டன் பிரதேச விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரதேசவாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த மைதானத்தில் ஹட்டன் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டு கழகங்களின் பயிற்சி நடவடிக்கைள், வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள், அம்பகமுவ பிரதேச சபையின் பல்வேறு நிகழ்வுகள் இந்த மைதானத்திலேயே நடாத்தப்படும்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக இப்பிரதேசத்தின் பிரபல அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டுடன் அரசியல்வாதிகள், பிரபல வர்த்தகர்களின் தகனக் கிரியைகளுக்காக ஹட்டன் டன்பார் மைதானம் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சுமத்தப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை நாளைய எமது பத்திரிகையில் பார்க்கவும்
15 minute ago
34 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
34 minute ago
50 minute ago