செ.தி.பெருமாள் / 2019 மார்ச் 27 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமான நாள் முதல், மார்ச் மாதம் வரையான காலப்பகுதிக்குள், ஹட்டன் டிப்போவுக்கு, 10 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக, ஹட்டன் டிப்போவின் பொறுப்பதிகாரி அனுர தொடன்தென்ன தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர், ஹட்டன் டிப்போவுக்கு, 25 பஸ்கள் மேலதிகமாக இருந்திருந்தால், இன்னும் சிறப்பான சேவையை வழங்கியிருக்கலாம் என்றும் மேலதிகமாக, 10 மில்லியன் ரூபாயை, வருமானமாகப் பெற்றிருக்க முடியும் என்றும் கூறினார்.
எனவே, இனிவரும் காலங்களில், சிவனொளிபாதமலை பருவகாலத்தில் சேவையை வழங்குவதற்கு, மேலதிகமாக 25 பஸ்களை வழங்குவதற்கு, போக்குவரத்து அமைச்சு முன்வரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, சாரதிகள், நடத்துநர்களின் பற்றாக்குறை நிலவுவதனால், நாளொன்றுக்கு 15 பஸ்கள், சேவையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இவ்வாறு சேவையில் ஈடுபடும் பஸ்கள் அனைத்தும், ஹட்டன் பிரதேசத்தின் கிராமப்புறங்களில் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். எனவே, ஹட்டன் டிப்போவில் காணப்படும் பஸ், சாரதிகள், நடத்துநர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, போக்குவரத்து அமைச்சு முன்வரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago