2025 மே 19, திங்கட்கிழமை

ஹட்டன் நகர மக்களுக்கு அவசர எச்சரிக்கை

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.கணேசன்

ஹட்டன் நகரில் சில கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் நகரின் டிக்கோயா வீதியில் அமைந்துள்ள எம்.ஆர். நகர பகுதியில் இடிந்து விழும் கட்டிடங்கள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை நுவரெலியா மாவட்ட கட்டிட ஆய்வு நிறுவன புவியியலாளர்கள் ஆய்வு செய்தனர்.

அதனையடுத்து, சில கட்டடங்களைச் சோதனையிட்டபோது, இதில் சில கட்டடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதை அவதானித்ததாக புவியியலாளர் திரு.புத்திக விஜேகோன் தெரிவித்தார். .

குறித்த பகுதியில் அமைந்துள்ள மிகவும் ஆபத்தான நான்கு மாடி கட்டிடத்தில் வெடிப்புகள் காணப்பட்டதாகவும், இதனால் அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள நிலவரப்படி, கட்டடம் உடனடியாக இடிந்து விழாது என்பது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டதாகவும், கட்டடம் கட்ட பெறப்பட்ட அனுமதி மற்றும் திட்டம் மற்றும் முறை கோப்புகளை சரிபார்த்து, இறுதி முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X