Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் கீழ் இயங்கும் பிரதான நகரான ஹட்டன் நகரத்தில் கழிவு குப்பைகள் அகற்றி இந்நகரை அனைவரும் விரும்பத்தக்க சுத்தமான நகரமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஹட்டன் நகரில் போடப்படும் கழிவுகளை அகற்றுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின் கவத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இதையடுத்து இவ்விடயம் தொடர்பாக உடனடியாக ஹட்டன் நகர சபை தவிசாளர் பாலச்சந்திரன் மற்றும் நகரசபை உறுப்பினர் ரட்ணகுமார் ஆகியோருடன் நேற்றை தினம் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார்.
இதையடுத்து கழிவு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், ஹட்டன் பொது சுகாதார அதிகாரி பாலசுப்பிரமணியம் அவர்களின் கண்கானிப்பின் ஊடாக கழிவுகளை அகற்றும் பணி நேற்றைய தினம் இடம்பெற்றது.
மேலும் ஹட்டன் நகரத்தில் சேகரிக்கும் குப்பைகளில் பொலித்தின், கடதாசி, போத்தல்கள், பிளாஸ்டிக் என உக்கும்,உக்கா கழிவு பொருட்கள் என வகை பிரித்து இடுமாறு ஹட்டன் நகரசபை நகரமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதை மக்கள் பின்பற்றும்மாறும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தோடு ஹட்டன் நகரில் இடம்பெறும் ஞாயிறு சந்தை தொகுதியின் கழிவுகளை அகற்றிய பின்னர் எதிர்காலத்தில் அவ்விடத்தில் சந்தைதொகுதியை வழமைபோல இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,ஹட்டன் நகரம் மற்றும் அதை அன்மித்த பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவு பொருட்களை படிப்படியாக அகற்றவும் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago