2025 மே 07, புதன்கிழமை

ஹட்டன் நகரில் கடும் எச்சரிக்கை

Kogilavani   / 2020 நவம்பர் 08 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ்

பொதுசுகாகாதார அறிவுறுத்தல்களை மீறி, ஹட்டன் நகரில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளுக்கும் நுகர்வோருக்கும் ஹட்டன் பொலிஸார், ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் பொதுசுகாதார பரிசோதகர்கள், நேற்று (8) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 14ஆம் திகதி தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுசுகாதார அறிவுறுத்தல்களை மீறி ஹட்டன் நகரில் நுகர்வோர் ஒன்று திரண்டதுடன், வர்த்தகர்களும் சுகாதார அறிவுறத்தல்களை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

விடுமுறை தினமான நேற்றைய (8) தினம் ஹட்டன் நகரில் சனநெரிசல் அதகரித்துக்காணப்பட்டதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தமக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமையா சனநெரிசல் அதிகரித்துக் காணப்பட்ட இடங்களைத் தேடிச் சென்று வர்த்தகர்களுக்கும் நுகர்வோருக்கும் கடும் எச்சரிக்கை விடுத்ததாக, பொலிஸாரும் பொதுசுகாதார பரிசோதகர்களும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X