Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூன் 21 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
ஹட்டன் இ.போ.ச பஸ் டிப்போ மூலம் இன்றிலிருந்து (21) தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஹட்டன் டிப்போ முகாமையாளர் டபிள்யு.ஜி.கே. கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
ஹட்டனிலிருந்து குறுகிய தூர சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு வாரத்துக்கு 100- 150 லீற்றர் டீசலை வழங்கவும் தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு தினமும் 100 லீற்றர் டீசலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன் தினமும் 20 – 30 பஸ்களுக்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பஸ்கள் தொடர்பான சுற்றுநிருபம், ஹட்டன்- தனியார் பஸ் சேவை அலுவலகத்திடமிருந்து கோரப்பட்டுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago