Editorial / 2024 ஜூன் 03 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் நகரில் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வர்த்தகரின் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஹட்டனில் டன்பார் பகுதியில் கடை ஒன்றை நடத்தி வந்த தனது கணவர் கடந்த (29) முதல் காணாமல் போயுள்ளதாக வர்த்தகரின் மனைவி ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஹட்டன் அபோஸ்லி தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆர்.ரஞ்சித்குமார் (வயது 46) என்பவர் கடந்த மாதம் (29ஆம் திகதி) தனது கடையைத் திறப்பதற்காக வீட்டிலிருந்து வந்தவர், அன்றைய தினம் கடையை திறக்காமல் வீடு திரும்பவில்லை.
காணாமல் போன வர்த்தகர் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த வர்த்தகர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரை 0718591117 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு ஹட்டன் பொலிஸார் கோருகின்றனர்
6 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
06 Nov 2025