Kogilavani / 2021 ஜனவரி 18 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, எச்.எம்.ஹேவா
பொதுசுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த வர்த்தகர்களுக்கு, ஹட்டன்-டிக்கோயா நகரசபை மற்றும் ஹட்டன் பொலிஸார் இணைந்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் நுகர்வோர் வழங்கியத் தகவலுக்கு அமைவாக, நகரசபையின் பொதுசுகாதார பரிசோதகர்களும் பொலிஸாரும் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், பொதுசுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாத வர்த்தகர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர் என்று, நகரசபையின் பொதுசுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.எஸ்.மெதவெல தெரிவித்தார்.
மேற்படி வர்த்தக நிலையங்களுக்கு சுகாதார விதிமுறைகளைப் முறையாகப் பின்பற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் 21 ஆம் திகதிக்குள் விபாயார நிலையங்களில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிபடுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுகாதார விதிமுறைகளை உறுதிபடுத்தத் தவறும் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago