2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஹந்தானையில் வழி தவறிய 10 மாணவர்கள் மீட்பு

Editorial   / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி ஹந்தானை மலையில் வழி தவறி காணாமல் போன பாடசாலை மாணவர்கள் 10 பேர் அடங்கிய  குழுவொன்று   வியாழக்கிழமை (05) காலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கிரிபத்கொடை ஆகிய  பிரதேசங்களைச் சேர்ந்த 16 முதல் 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் குழுவொன்று  புதன்கிழமை (04) காலை பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சரசவிகம பிரதேசத்தில் இருந்து ஹந்தானை மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

  மலையில் ஏறிக்கொண்டிருந்த போது கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் காரணமாக வழி தவறி காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்கள் குழு இது தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த மாணவர்கைளை மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X