மொஹொமட் ஆஸிக் / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹாரிஸ்பத்து பிரதேச சபைக்குக் கிடைக்கவேண்டிய சுமார் 40 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான முத்திரைக் கட்டணப் பணங்கள் கிடைக்காமையால், சபையின் அன்றாட நடவடிக்கை, பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என, சபைத் தவிசாளர் ஆனந்த ஜயவிலால் தெரிவித்தார்.
பிரதேச சபையின் மாதாந்தப் பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் (17) இடம்பெற்றபோது, அதில் உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்களிடம் அறவிடப்படும் முத்திரை பணம், 2017ஆம் ஆண்டிலிலிருந்து பிரதேச சபைக்குக் கிடைக்கவில்லை என்றும் இந்த வருடத்துக்கான பாதீடு, இந்த முத்திரைப் பணத்தை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டிருந்தபோதிலும், சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளது என்றும் அவர் கூறினார்.
எனவே, தங்களது பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட முத்திரைக் கட்டணம் அனைத்தையும், பிரதேச சபைக்கு செலுத்துவதற்கு, மாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, அவர் கோரிக்கை விடுத்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago