Freelancer / 2023 மே 14 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று இரவு தோவ விகாரைக்கு பதுளையில் இருந்து சென்ற நடன குழுவினர் மீண்டும் பதுளை பகுதிக்கு இன்று அதிகாலை திரும்பும் வேளையில் பதுளை பண்டாரவளை வீதியில் ஹாலிஎல பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பாரிய மரம் ஒன்றில் மோதி வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த 11 பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுள் 8 பெண்களும் 3 ஆண்களுமாக 20 வயதுக்கு குறைந்தவர்களே வேனில் பயணித்ததாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் 7 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா


17 minute ago
40 minute ago
45 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
40 minute ago
45 minute ago
55 minute ago