2026 மே 09, சனிக்கிழமை

dd

ஹெதன்சைட் தோட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை அதிகரிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீலமேகம் பிரசாந்த்

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட ஹெதன்சைட் தோட்டத்தில், சட்டவிரோத மதுபாவனையும் விற்பனையும் அதிகரித்துள்ளது என, தோட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோத மதுபான விற்பனையும் பாவனையும் அதிகரித்துள்ளமையால், தோட்டத்திலுள்ள இளைஞர்களும் பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர் என, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், ஓரிருவர் மாத்திரமே, இந்த மது விற்பனையில் ஈடுபட்டிருந்தனர் என்னும் எனினும் தற்போது பலர் இந்தச் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இந்தச் சட்டவிரோத நடவடிக்கையைத் தடுப்பதற்கு, பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் உடனடிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .