2025 மே 05, திங்கட்கிழமை

ஹெலி மூலம் மின்மாற்றிகள்

Janu   / 2023 டிசெம்பர் 16 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனடி பாத மலைக்கு தடை இன்றி மின் வழங்க இலங்கை மின்சார சபை முன் வந்து சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான வீதியில் மூன்று இடங்களில் புதிய மின் மாற்றிகள் பொருத்தும் பணி ஆறம்பிக்கப்பட்டு துரிதமாக பணிகள் இடம் பெற்று வருகிறது.

இதற்கு ரத்மலான விமான படையின் உழங்கு வானுர்தி மூலம் மின் மாற்றிகள் மற்றும் மின் உபகரணங்கள் நல்லதண்ணி நகரில் உள்ள வாகன தயாரிப்பு இடத்தில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்துள்ளது.

மேலும், மின் மாற்றிகள் பொருத்திய பின்னர் சியத்த கங்குல ஓயா பகுதியில் இருந்து சுத்தமான குடிநீர் மலை உச்சிக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு இருந்து மலை அடிவாரம் வரை உள்ள பகுதிகளுக்கு குடி நீர் வழங்க ஏற்பாடு செய்து வருவதாக  தேசிய நீர் வடிகால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செ.தி.பெருமாள்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X