2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயத்தில் 106 பேர் உயர்தரத்துக்கு தகுதி

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 26 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3 ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயத்தில், கடந்த வருடம் நடைபெற்ற சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 116 மாணவர்களில் 106 பேர் சிறந்த பெறுபேறுகளை பெற்று  உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அந்த வகையில் 09 ஏ சித்திகளை பெற்று நடராஜா நஸ்ரியாபானு என்ற மாணவி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதேவேளை,   அருள் ராஜன் அபிலாஷினி  8 .ஏ. 1 பி, ஜெலாப்தீன் பாத்திமா அப்ஷா 07ஏ 01, பி. 01.சி, சுந்தர்ராஜன் விவேக் 06.ஏ.02.பி 01.சி, விஜயரடணம் அபிலாஷினி 06. ஏ. 01.பி.01சி, தணபாலசிங்கம் அக்ஷயா 05ஏ.03.பி, பால்ராமன் மிதுஷன் 05.ஏ 03.பி.01சி, பரமசிவன் சரணி 05ஏ 01சி.02.எஸ், ரொபின்ஷன் செல்சியா ஜெனிபர் 05ஏ.01பி.02சி.01எஸ்,இளையராஜா ஹம்சவர்தன் 04ஏ.01பி.02சி.02எஸ், சந்திரசேகரன் வினோஜினி 04ஏ.02பி.02எஸ், ரொபர்ட் ஜுவலின்மேரி 04ஏ.02சி 03எஸ், பெறுபேறுகளை பெற்று உயர் தரத்திற்கு தெரிவாகியுள்ளனர்

பெறுபேறுகள் தொடர்பாக பாடசாலை முதல்வர் முத்து ஜெயராமன் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கற்றல் நடவடிக்கை மாணவர்கள் மத்தியில் பாதிப்பாக இருந்தாலும் ஆசிரியர்கள் இணையத்தினூடாக கற்றல்  நடவடிக்கையை மேற்கொண்டனர். அத்தோடு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கியதன் காரணமாகவே, பெறுபேறுகளை பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்தது.

ஆசிரியர்களும் எந்தநேரத்திலும் மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகள்  முறையாக வழங்கிருந்தமை தன்னால் கூறமுடியும். அத்தோடு பெற்றோர்களும் அதிக அக்கறை செலுத்தினார்கள்  பாடசாலை பெறுபேறுகள் என்பது ஆசிரியர்கள் கைகளில் மட்டும் தங்கி இருப்பதில்லை.

 

 

 மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களின் உன்னத செயல்பாடுகளின் மூலமே சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு வாய்ப்பாக அமையும்.

இதனை எங்கள் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் தங்களின் பங்கினை முழுமையாக வழங்கி வருகின்றமை எனக்கு கிடைத்த  வரப்பிரசாதமாகும் என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X