Editorial / 2017 ஜூன் 04 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இனிவரும் காலங்களில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும்போது பாரிய இழப்புகள் ஏற்படாத விதத்தில் அவற்றுக்கு முகம் கொடுக்கக் கூடிய விதத்தில் செயற்படுவதற்காக தேவையான செயற்றிட்டங்களை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இன, மத, கட்சி பாகுபாடின்றி மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை ஆகும்” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இரத்தினபுரி பிரதேசத்தில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று (03) உலர், உணவு பொருட்களை பெற்றுக் கொடுத்ததன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 300 பேர் பலியாகினர். இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்” எனவும் தெரிவித்தார்.
இங்கு, தொழில் மற்றும் தொழிலுறவு, சப்ரகமுவ மாகாண அபிவிருத்தி அமைச்சர் ஜோன் செனவிரத்ன உரையாற்றுகையில்,
“தற்போது, பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சிங்களவர்கள் மட்டும் அல்ல தமிழ், முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்கள் இடம்பெறும் போது இன,மத, மொழி பார்ப்பதில்லை. நாம் அனைவருமே அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். வடக்கு, கிழக்கில் சுனாமி அனர்த்தத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட போது அவர்களுக்கு நிவாரணங்களை வழங்கிய இரத்தினபுரி மக்கள், தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago