Super User / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
( கே .என். முனாஷா)
நீர்கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் நகரில் உள்ள ஹோட்டல்களில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த ஐந்து ஹோட்டல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததாக நீர்கொழும்பு பிரதம பொது சுகாதார பரிசோதகர் சோமசறி தெரிவித்தார்.
பிரதான பஸ் நிலையம் அருகிலும் நீதிமன்றம் அருகிலும் உள்ள உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது நுகர்வுக்கு பொருத்தமற்ற 50 கிலோகிராம் பூசனி தோசியும், எந்தவித லேபல்களும் ஒட்டப்படாத இனிப்பு உணவுவகைகள் பலவும் கைப்பற்றப்பட்டதாக பிரதான பொது சுகாதார பரிசோதகர் சோமசிறி தெரிவித்தார்.
நகரின் மத்தியில் உள்ள பிரதான ஹோட்டல்களில் கூட, உணவு தயாரிக்கப்படும் இடம் மற்றும் மலசல கூடங்கள் சுகாதாரத்துக்கு பொருத்தமற்ற நிலையில் இருப்பதாகவும், இது போன்று காணப்பட்ட ஐந்து ஹோட்டல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குற்றவாளிகளாக காணப்பட்டோருக்கு 5000 முதல் 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர்கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
shajahan Saturday, 03 December 2011 07:03 PM
இந்த தண்டனை போதாது .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago