2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

உள்ளூராட்சி சபைகளுக்கு 6 கெப் வாகனம் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளுராட்சி சபைகளுக்கு கெப் வாகனம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்  மேலும் 6 உள்ளுராட்சி சபைகளுக்கான கெப் வாகனம் செவ்வாயக்கிழமை (30) வழங்கப்பட்டது.

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க, அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க, அமைச்சரின் இணைப்புச் செயலாளர், பொறியியலாளர் எம்.எஸ்.நஸீர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மஹியங்கனை பிரதேச சபை, புத்தளம் பிரதேச சபை உடுநுவரபிரதேச, எஹலியகொட, கந்தேகெட்ய, சேருவில ஆகிய பிரதேச சபைகளுக்கு அமைச்சர் அதா உல்லாவினால் கெப் வாகனம் வழங்கப்பட்டது. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X