Super User / 2011 ஒக்டோபர் 10 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லேரியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பாக 16 துப்பாக்கிகள் சகிதம் நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 பிஸ்டல்கள், 2 சுழல் துப்பாக்கிகள் மற்றும் ரி56 ரக துப்பாக்கிகள் என்பன கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் அடங்கும்.
மேற்படி துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பாக இதுவரை 37 வாக்குமூலங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பதிவு செய்துள்ளனர்.
மேற்படி துப்பாக்கிப் பிரயோகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர பலியானதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
18 minute ago
23 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
23 minute ago
35 minute ago