Super User / 2011 நவம்பர் 06 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் 5 நட்சத்திர ஹோட்டலொன்றை நிர்மாணிப்பதற்கு இலங்கை இராணுவம் திட்டமிட்டுள்ளது. இதற்குப் பொருத்தமான காணியை தேடிவருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆரச்சி கூறியுள்ளார்.
அபிவிருத்தி மற்றும் நிர்மாணப் பணிகளுக்காக இராணுவத்திற்குள் தனியான கம்பனியொன்றை வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.
எனினும் இந்த யோசனை குறித்து தற்போது கலந்துரையாடப்படுவதாகவும் பொரும்பாலும் இதற்காக இராணுவத்திற்குள் தனியாக நிர்வாக சபையொன்று அமைக்கப்படலாம் எனவும் பிரிகேடியர் ஹப்புஆரச்சி கூறினார்.
வீடுகள் நிர்மாணம் மற்றும் வீதி நிர்மாணம் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை இராணுவம் மேற்கொண்டதால் அரசாங்கத்திற்கு 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை சேமிக்க முடிந்துள்ளது. (சுபுன் டயஸ்)
10 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago