2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நுகேகொடை உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு ஏப்ரல் 5 வரை விளக்கமறியல்

Super User   / 2012 மார்ச் 22 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                            (ரி.பாருக் தாஜுதீன்)

பத்து லட்சம் ரூபா லஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட நுகேகொடை பிரிவு உதவி பொலிஸ் அத்திட்சகர் ரஞ்சித் மெண்டிஸை ஏப்ரல் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதாவன் ரஷ்மி சிங்கப்புலி இன்று உத்தரவிட்டார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்த மேற்படி சந்தேக நபர் இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்.

சந்தேக நபர் சார்பில் வழக்குரைஞர்கள் சஞ்சய கமகே, பிரியரஞ்சன் ஜயசிங்க ஆகியோருடன் ஆஜரான சிரேஷ்ட வழக்குரைஞர் அசோக வீரசூரிய வாதாடுகையில்  லஞ்ச சட்டத்தின்கீழ், சட்டமா அதிபரின் அனுமதியின்றி, சந்தேக நபரை பிணையில்  விடுதலை செய்வதற்கு  நீதவானுக்கு அதகாரமில்ல்லை எனவும் ஆனால் விசேட நிலைமையின் கீழ் பிணை வழங்குவதை கருத்திற்கொள்வதற்கு நீதவானுக்கு அதிகாரம் வழங்ப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

சந்தேக நபருக்கு பிணை வழங்குவது தொடர்பாக கருத்திற்கொள்வதற்காக அவரின்  மருத்துவ நிலை குறித்த அறிக்கையை  தான் சமர்ப்பிப்பதாகவும் வழக்குரைஞர் வீரசூரிய கூறினார். இவ்விடயம் தொடர்பாக நாணயத்தாள்களின் இலக்கங்கள் முதலான விபரம் கொண்ட அறிக்கையை  'பி' அறிக்கையுடன் லஞ்சத் திணைக்களம் சமர்ப்பிக்க தவறியுள்ளதாகவும்  சிரேஷ்ட அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்யத் தவறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

லஞ்ச விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் ஜி. சந்திரிசிறி மற்றும் ரஞ்சித் பண்டார ஆகியோர் வாதாடுகையில், இச்சந்தேக நபர் ஆலயமொன்றில் வைத்து 10 லட்சம் ரூபா லஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மஹரகம பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பல பொலிஸ்  அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் கூறினர். இச்சந்தேக நபர் லஞ்சம் பெறும்போது நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டால் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சந்தேக நபரை ஏப்ரல் 5 ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிடடார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X