2025 மே 06, செவ்வாய்க்கிழமை

800 கிலோகிராம் மாட்டிறைச்சியுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூன் 09 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நிமாலி கஹாவல

களுத்துறை, பண்டாரகமயில், சுமார் 800 கிலோகிராம் நிறையுடை மாட்டிறைச்சியை சொகுசு வானொன்றில் கொண்டு சென்றார்கள் என்ற சந்கேத்தின் பேரில், இரண்டு சந்தேக நபர்களை இன்று வியாழக்கிழமை (09) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பண்டாரகமை, அடுழுகம பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில், பல காலமாக மாடுகள் இறைச்சியாக்கப்படுகின்றமை ஆரம்பக் கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், 800 கிலோகிராம் மாட்டிறைச்சியையும் கைப்பற்றினர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X