Princiya Dixci / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாளிகாகந்த பகுதியில், ஒரு தொகை தீர்வையற்ற சிகரெட்டுக்களை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நபரொருவரை, நேற்று திங்கட்கிழமை (12) கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 10ஐச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட 66,000 சிகரெட்டுக்களை இவரிடமிருந்து மீட்ட பொலிஸார், இவரிடம் மேற்கொள்ளப்பட்ட
விசாரணைகளின் போது 3 கிராம் 500 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோய்னையும் இவரிடமிருந்து மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .