Gavitha / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட். ஷாஜஹான்
பிரபல ஊடகவியலாளரும் மனித உரிமை ஆர்வளருமான பிரடி கமகேயின் மகளின் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக 'மகளுக்காக நாங்கள்' எனும் தொனிப் பொருளில் ஐந்து குறு நாடகங்கள் நீர்கொழும்பில் மேடையேற்றப்படவுள்ளன.
சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உட்படுத்தபடவுள்ள மாணவி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தில் முதலாமாண்டில் கல்வி கற்பவராவார்.
மேற்படி பல்கலைக்கழக மாணவியின் சிக்ச்சைக்காக, 25 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகை அவசியமாகவுள்ள நிலையில், நீர்கொழும்பு நகரில் வசிக்கும் சிங்கள கலைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து, அதற்கான நிதியின் ஒருபகுதியை திரட்டும் வகையில்; இந்த நாடகங்களை மேடையேற்றவுள்ளதாகவும் இவற்றில் நான்கு நாடகங்கள் தேசிய ரீதியில் பல விருதுகளை பெற்றுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு மாநகரசபை மண்டபத்தில், எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை பகல் 3 மணி (பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரம்) மற்றும் மாலை 6.30 மணி என இரு காட்சிகளாக இந்த நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன.
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago