Princiya Dixci / 2016 ஜூன் 24 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்
43 வெளிநாட்டு மதுபான போத்தல்களைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முற்பட்ட இருவரை, கட்டுநாயக்க பொலிஸார், நேற்று வியாழக்கிழமை (23) கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர்கள், கட்டுநாயக்க விமானநிலையத்தின் சுங்க ஓய்வு விடுதியின் வாகனப் பிரிவிலிருந்து மதுபான போத்தல்களை வெளியே கொண்டு செல்லும்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜா-எல மற்றும் மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர், ஜா-எல பிரதேசத்தில் தனியார் வகுப்புக்களை நடத்தும் பிரசித்தம் பெற்ற கணித ஆசிரியராவார்.
சந்தேகநபர்களை, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்செய்தபோது நீதவான் துஸ்ஸந்த எபிட்டமுல்ல, ஒருவருக்கு தலா 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
13 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago