2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'வெளியாரை நம்புவது வேடிக்கையானது'

Princiya Dixci   / 2016 ஜூன் 01 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு, தமிழ்நாடு போன்ற வெளித்தரப்புக்களை மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்தும் நம்பி புகழ்பாடிக்கொண்டிருப்பது பொருத்தமான அனுகுமுறையொன்றாகாது' என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சி.வை.பி.ராம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலம் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

'தமிழக தேர்தல் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு மலந்திருக்கும் ஆட்சி, இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு விடியலைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையை கொண்டிருப்பதாக சில முக்கிய மக்கள் பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 

கடந்த காலத்தில் பல அனுபவங்களை நாம் பெற்றிருக்கின்றோம். முதலில் உள்நாட்டுக்குள் சத்தியாகக் கிரக போரட்டங்கள் நடைபெற்றன. ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தியா உதவும், சர்வதேசம் உதவும் தமிழ் நாடு கைகொடுக்கும் என பலத்த எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டபோதும் ஈற்றில் இழப்புக்களும் வலிகளும் தான் எம் இனத்திற்கு எஞ்சியதாய் உள்ளது.

இந்நிலையில் தற்போது நாட்டில் அரசியல் நிலைமைகள் மாற்றமடைந்துள்ளன. பெரும்பான்மையின பிரதான இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியில் அமர்ந்திருக்கின்றன. நீண்டகால இனப்பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை எட்டுவதற்கான நடவடிக்கைகள் மிகவும் அவதானமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான தருணத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் தமிழ் மக்களுக்கு அனைத்தையும் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டும் வகையிலான கருத்துக்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடமிருந்து வெளிவருவதானது வேடிக்கையாகவுள்ளது.

முதலாவதாக ஒரு நாடு இன்னொரு நாட்டின் இறைமையினுள் தலையீடு செய்து அழுத்தங்களையோ அல்லது முறையற்ற வகையிலான அனுகுமுறைகள் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதென்பது முடியாத விடயம். குறிப்பாக இந்தியா அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளது. அதனை தெளிவாக அந்நாட்டின் பிரதமர் உட்பட அனைத்து தரப்பினரும் கூறிவருகின்றனர்' அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X