2025 நவம்பர் 19, புதன்கிழமை

'விவசாயத்துறையின் சபீட்சத்துக்கு எனது பதவிக்காலத்தில் உழைப்பேன்'

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்றவகையில் விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்தி, நாட்டை விவசாயத்துறையில் சுபீட்சமடையச் செய்வதற்கு, தனது பதவிக்காலத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாரிய குளங்களை நிரப்பி விவசாய சமூகத்தினர் நீர் பிரச்சினைக்கு முகங்கொடுக்காதவகையில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கலேவெல வெலமிட்டியாவ வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் நேற்று  (13) முற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அரசியல் கட்சி வேறுபாடுகளின்றி நாட்டின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றுபடுவது அனைவரினதும் பொறுப்பாகும் எனக் குறிப்பட்ட ஜனாதிபதி, அரசாங்கத்தை அமைப்பதற்கும் அரசாங்கத்தை மாற்றுவதற்கும் தேர்தலின்போது முடியும் என்றும் இன்று செய்ய வேண்டியது பேதங்களை மறந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றுபடுவதாகும் என்றும் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் நேர்மையாக தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவார்களாயின், நாடு இன்று முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளில் இருந்து மீள்வது கடினமானதல்ல எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் அபிவிருத்தி இலக்கை நோக்கி தொடர்ந்தும் பயணிப்பதாகும் என்றும் எத்தகைய சவால்கள் ஏற்பட்டபோதிலும் நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

அமைச்சர்களான எஸ்.பி. நாவின்ன, அநுரபிரியதர்சன யாப்பா, காமினி ஜயவிக்கிரம பெரேரா, அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர்களான லக்ஷ்மன் வசந்த பெரேரா, தாரானத் பஸ்நாயக்க, வட மேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்னாயக்க, முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க  ஆகியோரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X