2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

14 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான 5000 ரூபா போலி நோட்டுகள் மீட்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 20 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்

14 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான 289 போலி ஐயாயிரம் ரூபா  நோட்டுக்களுடன் நீர்கொழும்பு தளுபத்தையில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நாணயத்தாள்களை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்;கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ஜயந்த லியனகே தெரிவித்தார்.

நீர்கொழும்பு , தளுபத்தை, பல்லன்சேனை வீதியில், இன்டர்சீட் வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து தியாக மூர்த்தி நிதர்சன் (25 வயது), முருகேசுப்பிள்ளை வசீகரன் (22 வயது),  ஆகியோரே கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.டி.ஜி. விஜேசிறிக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் , நீர்கொழும்பு பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ஜயந்த லியனகே நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின்  பதில் பொறுப்பதிகாரி ஆர்.டி.ஜி சிறில் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் செயற்பட்ட பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் போலி நாணயத்தாள்களையும் உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.

உப-பொலிஸ் பரிசோதகர் எஸ்.டி.ஜி. விஜேசிறிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் முதலில் ஒரு சந்தேக நபர்  தளுபத்தையில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரின் மணிப்பேர்ஸில் ஐயாயிரம் ரூபா  போலி நோட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது, தளுபத்தை, பல்லன்சேனை வீதியில் இன்டர்சீட் வத்தை  அறுபது அடி (அடி எட்ட வீதி) பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து டிஜிட்டல் கனிணி இயந்திரம், கடதாசி வெட்டும் இயந்திரம், கனிணி, லெப்டொப், விசைப்பலகைகள் இரண்டு, பணம் அச்சடிக்கும் தாள் 34, ஒரு பக்கத்தில் அச்சடிக்கப்பட்ட ஆயிரம் ரூபா தாள்கள் இரண்டு, ஒரு பக்கத்தில் அச்சடிக்கப்பட்ட 5 ஆயிரம் ரூபா தாள் ஒன்று, பிரின்டர், ஐயாயிரம் ரூபா  போலி நோட்டுக்கள் 289,  என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்ப்பட்டுள்ள சந்தே நபர்கள் இருவரும் இதற்கு முன்னரும் குற்றச் செயல்களின் பேரில் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தபட்டவர்கள் எனவும், விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

சந்தே நபர்கள் இருவரும் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார் சந்தே நபர்கள் இருவரையும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X