2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

1,65,000 ரூபா மோசடி தொடர்பாக இருவர் கைது

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சாராபத் அமீர்)

மத்துகம தனியார் வங்கியொன்றில் வைப்புச் செய்யப்பட்ட பணத்திலிருந்து 1,65000 ரூபாவை மோசடியாகப் பெற்ற சம்பவம்  தொடர்பாக இரு சந்தேக நபர்களை மத்துகம பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

அகலவத்த கிதுல்கொட பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரது வங்கிப் புத்தகம், அடையாள அட்டையை களவாடியே இவ்வாறு வங்கியிலிருந்து இரு தடைவை பணம் பெற்று மோசடி செய்துள்ளமை தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்தே, சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .