2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

2,230 கிலோ கிராம் மஞ்சள் பறிமுதல்

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார

சட்டவிரோதமானமுறையில் கடல் மார்க்கமாக, படகொன்றின் மூலம் இந்தியாவிலிருந்து   கொண்டுவரப்பட்ட 2,230 கிலோ கிராம் மஞ்சளை, கடற்படையினர் இன்று (03) கைப்பற்றியுள்ளனர்.

​மேற்படி மஞ்சள் தொகையை, பேருவளை கடற்ப​குதியில் வைத்து கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி, பேருவளை துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற ஐவரடங்கிய குழுவினர், நேற்று (02) கரையை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, மேற்படி படகை சோதனை செய்த கடற்படையினர் அதிலிருந்த மஞ்சள் தொகையை கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X