Super User / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை வைத்தியசாலையில் ஆய்வுகூடத்திற்குத் தேவையான வசதிகளை சுகாதார அமைச்சு ஏற்படுத்திக் கொடுக்காவிட்டால் தாம் வேலை நிறுத்தம் செய்யப்போதாக மேற்படி ஆய்வுகூடத்தின் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்கள் இன்று எச்சரித்துள்ளனர்.
தற்போது நாட்டின் மிகச் சிறந்த ஆய்வுகூடங்களில் இந்த ஆய்வுகூடம் விளங்குவதாகவும் அதற்கு அவசியமான கருவிகள், மருந்துகள் என்பன கிடைக்கவில்லை எனவும் அரசாங்க மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வுக்கூடத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட கருவிகள் இன்னும் ஆய்வுகூடத்திற்கு கிடைக்கவில்லை எனவும் அதனால், பரிசோதனைகளை ஏனைய ஆய்வுகூடங்களில் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.

-.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago