Super User / 2011 ஜனவரி 04 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மல் சூரியகொட)
கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாஸா கட்டிட தொகுதியில் விபசார விடுதியொன்றை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபரான றோஸ்மேரி பெலிஸியா பெரேரா அல்லது ஜீனா என்ற பெண்ணை தொடர்ந்து ஜனவரி 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் இன்று உத்தரவிட்டார்.
தாம் முதலாவது சந்தேகநபரான றோஸ்மேரி பெலிஸியா பெரேரவின் கையடக்க தொலைபேசி தொடர்பில் புலன்விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக புலனாய் பொலிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
சந்தேகத்துக்குரிய விபச்சார விடுதியின் வாடிக்கையாளர் இருவரிடமிருந்து பொலிஸார் வாக்குமூலத்தை பதிவுசெய்ததாகவும் நீதிமன்றில் கூறினர்.
முதலாவது சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜயந்த வீரசிங்கஇ சுற்றி வளைப்பு நடந்த சமயத்தில் அவர் அங்கு இருக்கவில்லை. மேலும் சம்பந்தப்பட்ட வீடு வெளிநாட்டவருக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டது. எனவே இவரை இந்த வழக்கில் எந்த வகையிலும் பிரதிவாதியாக்க முடியாது என வாதிட்டார்.
எனினும் இவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றம் பணித்தது.
21 minute ago
24 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
27 minute ago