Super User / 2011 பெப்ரவரி 05 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கொழும்பு மாவட்ட முஸ்லிம் மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்துவதற்கு தன்னாலான உதவிகளை செய்ய தயார் என ஸஹ்ரா பவுண்டேஷன் தலைவர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் இடம்பெறவுள்ள க.பொ.த. உயர் தரம் மற்றும் சாதாரண தரம் ஆகிய பரீட்சைகளில் அனைத்து பாடங்களிலும் விஷேட சித்தி பெறும் மாணவர்களுக்கு தலா 50 ஆயிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணப் பரிசில்களை வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் அறிவிததுள்ளார்.
கடந்த வாரம் இவர் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் மருதானை ஹைரியா பெண்கள் மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்து பாடசாலை நிருவாகத்தினருடன் கலந்துரையாடினார்.
பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி நிர்வாகம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய ஜிப்ரி, தலைநகரின் பெரிய மகளிர் பாடசாலையான இதன் தரத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஆசிரியர் குழாத்திலிருந்து இருவரையும் மாணவர்களில் 5 பேரையும் தெரிவு செய்து சிங்கப்பூருக்கான கல்வி சுற்றுலா செல்ல அனைத்து செலவுகளையும் மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
மேலும் க.பொ.த. சாதாரண தரத்தில் திறமை சித்தியடைந்து உயர் தரம் கற்க வசதியின்றி இருக்கும் 20 மாணவிகளை தெரிவுசெய்து உயர் தரம் கற்கும் வரையான மாதாந்த புலமை பரிசில்களை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
3 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
32 minute ago