Super User / 2011 மே 10 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
இலங்கை மற்றும் சர்வதேச நாடுகளுக்கிடையில் இரு தரப்பு வர்த்தகம் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுக்கும் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்புக்கள் இன்று இடம்பெற்றன.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கேட்போர் கூடத்தில் இந்த சந்திப்பு தனித்தனியாக இடம்பெற்றது.
பங்களதேஷ், எதியோப்பியா, கானா, மோல்டோவா, சில்லி மற்றும் ஜப்பான் நாடுகளின் தூதுவர்களுடன் இன்று சந்தித்து இரு தரப்பு வர்த்தகம் இலங்கையின் ஏற்றுமதியின் தற்போதைய முன்னேற்றம் குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் விளக்கமளித்தார்.
மோல்டோவா உயர் ஸ்தானிகர் தெரேசா குடெஜ்யார், எதியோப்பியா உயர் ஸ்தானிகர் ஜெனட் சேவைட், பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் மஹ்பூப் உஸ் ஸமான், ஜப்பான தூதுவர் குனியோ தகாசி, கானா உயர் ஸ்தானிகர் ரெபேர்ட் டெசி மென்ஷன் ஆகியோருடனேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளதை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தூதுவர்களுக்கும் ,உயர் ஸ்தானிகர்களுக்கும் எடுத்துக் கூறினார்.
அதே வேளை ஜப்பான நாட்டிலிருந்து இலங்கை 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாகன இறக்குமதி செய்யப்படுகின்றன. 2009ஆம் ஆண்டில் ஜப்பானில் இடம்பெற்ற சர்வதேச ஆபரணம் டேக்கியோ கண்காட்சி குறித்தும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தூதுவருக்கு விளக்கமளித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
4 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
33 minute ago