Super User / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.பாருக் தாஜுதீன்)
பாதசாரிகளுக்கான மஞ்சள் கடவையை பயன்படுத்தாமல் வீதியை கடந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவருக்கு கொழும்பு போக்குவரத்து நீதிமன்ற நீதவான் இன்று 100 ரூபா அபராதம் விதித்தார்.
மொஹமட் அன்சார் மொஹமட் முஸ்தபா எனும் இந்நபர் போக்குவரத்து நீதிமன்ற நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பாதசாரிகளுக்கான கடவை விதியை மீறும் நபர்களுக்கு அறிவூட்டுவதற்காக தாம் வகுப்பொன்றை நடத்துவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். இந்நபரை ஞாயிறன்று வகுப்புக்கு வருமாறு உத்தரவிடப்பட்டிருந்தபோதிலும் அவர் சமுகமளிக்கவில்லை என பொலிஸார் கூறினர்.
பாதசாரிகளுக்கான மஞ்சள் கடவையிலிருந்து 50 மீற்றர் தூரத்திற்குட்பட்ட பகுதியில் மஞ்சள் கடவையை பயன்படுத்தாமல் வீதியை கடப்பது குற்றமாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு 100 ரூபா அபராதம் விதித்த நீதவான் வீதி ஒழுங்குகளை பின்பற்றுமாறும் எச்சரித்தார்.
3 hours ago
4 hours ago
Rifky Monday, 26 September 2011 11:48 PM
மஞ்சல் கோட்டினூடாக வீதியை கடக்கும் போதும் சிலர் வாகனத்தை நிறுத்தாமல் செல்கின்றனர், அது தொடர்பாகவும் பொலிஸ் கவனம் செலுத்தவேண்டும்
Reply : 0 0
xlntgson Tuesday, 27 September 2011 09:17 PM
நூறு ரூபா அபராதம் நியாயம் தான். ஆனால் ஆயிரத்து ஐநூறு ரூபா செலுத்தியும் நீதி மன்ற அவமரியாதை வழக்கை எதிர் நோக்குவதாக ஒருவர் புறக்கோட்டையில் என்னிடம் முறைப்பட்டார், பயத்தில் ஆரம்பத்திலேயே போகவில்லையாம். ஒரு வழக்கறிஞர் வைத்துத் தான் ஆஜர் ஆனாராம். பிறகு ஒன்றும் நடவாதது போல் வழக்கறிஞர் அதற்கும் ஆஜராக பணம் கேட்கிறாராம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago