A.P.Mathan / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கடந்த 30ஆம் திகதி மாலை அமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. விரைவானதும் கௌரவமானதுமான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் இங்கு வலியுறுத்தப்பட்டதுடன் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாதிருக்கும் மக்களை விரைவில் மீள்குடியேற்றம் செய்வது தொடர்பிலும், புனர்வாழ்வு நிலையங்களில் எஞ்சி இருக்கும் இளைஞர், யுவதிகளை விரைவில் விடுவிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை கூடிய விரைவாக விசாரணைகள் செய்வது, அவர்களை விடுதலை செய்வது குறித்தும் அவதானஞ் செலுத்தப்பட்டது.
மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இங்கு கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரைவாக நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.


6 minute ago
18 minute ago
26 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
26 minute ago
31 minute ago