Super User / 2011 நவம்பர் 03 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
மாலபேயிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழுவானது தனது ஆய்வுகளை மேற்கொண்டுவருவதாகவும் எதிர்வரும் வாரங்களில் அக்குழு தனது அறிக்கையை வெளியிடும் எனவும் சுகாதார அமைச்சு இன்று கூறியுள்ளது.
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி அரசாங்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்திற்கான தெற்காசிய நிறுவகம் எனும் பெயரிலான இக்கல்லூரி தொடர்பான அறிக்கை பூர்த்தியானதும் அவ்வறிக்கையிலுள்ள சிபாரிசுகள் அமுல்படுத்தப்படும் எனவும் அதன்பின் இக்கல்லூரி தொடர்பாக தற்போதுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் ரவிந்திர ருபேரு கூறினார்.
இக்கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சிக்காக அரசாங்க வைத்தியசாலைகளை பயன்படுத்த அனுமதிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக இக்கல்லூரியினால் அறிவிக்கப்பட்ட போதிலும் தான் அவ்வாறான உத்தரவாதம் எதையும் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago