Super User / 2011 நவம்பர் 05 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
கொள்ளுபிட்டி விபசார விடுதியொன்றை நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 'மெடம் ஜீனா' என அழைக்கப்படும் ரோஸ்மேரி பெலிஸியா பெரேரா, அனுமதியின்றி சிறுத்தையின் தோல் ஒன்றை வைத்திருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
ரோஸ்மேரி பெலிஸியா பெரேரா மீதான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேற்படி விபசார விடுதியில் முற்றுகை நடத்திய புலனாய்வு அதிகாரி இதை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வர்த்தக கட்டிடத் தொகுதியிலுள்ள 8 ஆவது மாடியிலிருந்து அவ்விபசார விடுதியை முற்றுகையிட்டபோது அங்கிருந்து சிறுத்தை தோலை தாம் கைப்பற்றியதாக சப் இன்ஸ்பெக்டர் ஜனக் டி சில்வா கூறினார்.
மேற்படி விடுதியில் பெண்களை விபசாரத்திற்கு வழங்கிய குற்றச்சாட்டில் ரோஸ்மேரி பெலிஸியா பெரேரா உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
16 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
21 minute ago
33 minute ago