2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொழும்பு மேயரின் குற்றச்சாட்டை மாநகரசபை எதிர்க்கட்சியினர் நிராகரிப்பு

Super User   / 2011 நவம்பர் 06 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

கொழும்பு மாநகர சபைக் கட்டிடத்தின் அறையொன்றை எதிர்க்கட்சியினர் பலவந்தமாக திறந்ததுடன் சாவியையும் எடுத்துச் சென்றனர் என கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் சுமத்திய குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபை எதிர்க்கட்சி பேச்சாளர் ரிஸா ஸரூக் இது தொடர்பாக செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மாநகர சபையின் எந்த சாவியையும் கொண்டு செல்லவில்லை எனக் கூறினார். அத்துடன் மாநகர சபை எதிர்க்கட்சிக் கட்சித் தலைவரின்  அறைக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எந்தவேளையிலும் செல்லமுடியும் எனவும் அவர் கூறினார்.

அறையொன்று தேவை என மேல் மாகாண சபை முதலமைச்சரிடம் எதிர்க்கட்சியினர் கோரியதாகவும் அவர் அதை உடன் வழங்கியதாகவும் ரிஸா ஸரூக் கூறினார். எனினும் அவர்கள் மேயரிடம் இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X