Super User / 2011 நவம்பர் 06 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருந்தகவியலாளர்களுக்காக Handbook of Good Pharmacy Practice (சிறந்த மருந்தக நடைமுறைக்கான கையேடு) எனும் தலைப்பிலான நூலொன்று மருந்தகவியலாளர்கள் சங்கத்தினால் எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது.
கொழும்பு 10 இல் அமைந்துள்ள எக்ஸல் வேர்ல்ட்டில் நடைபெறவுள்ள இவ்வெளியீட்டு விழாவில் பிரதி சுகாதாரஅமைச்சர் லலித் திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொள்வார்.
டாக்டர் டைட்டஸ் டி சில்வா இந்நூலை எழுதியுள்ளார். பிரிட்டனின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மருந்தகவியலில் பட்டம்பெற்ற டைட்டஸ் டி சில்வா, 1971 ஆம் ஆண்டில் சுகாதாரஅமைச்சின் மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வுக்கூடாத்தை ஜப்பானிய உதவியுடன் ஸ்தாபிப்பதற்கு பொறுப்பாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago