2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் முற்றுகை; மூவர் கைது

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 27 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீர்கொழும்பு, வெலிகம்பிட்டியவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த  கருக்கலைப்பு நிலையமொன்றை நேற்று சனிக்கிழமை இரவு முற்றுகையிட்ட பொலிஸார், அந்நிலையத்தை நடத்தியதாகத்  தெரிவிக்கப்படும் மூவரையும் கைதுசெய்துள்ளனர்.

நீர்கொழும்பு நீதிபதியினால்  தேடுதல் ஆணை வழங்கப்பட்டதையடுத்து, குறித்த நிலையம் முற்றுகையிடப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இக்கருக்கலைப்பு நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்த  இரு பெண்களும் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கைதுசெய்யப்பட்ட இவ்விரு பெண்களும் இராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், இது தொடர்பில் ஜாஎல பொலிஸார்; மேலதிக விசாரணையை மேற்கொண்டு  வருவதாகவும் கூறினார்.

இலங்கையில் தினமும் நூற்றுக்கணக்கான கருக்கலைப்புச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இச்சட்டவிரோத  கருக்கலைப்பு நிலையங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். (Supun Dias)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X