Super User / 2011 நவம்பர் 28 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக புகழ் பெற்ற ஈரானிய கலைஞர்களின் பங்களிப்பில் உருவான திரைப்படங்கள் கொழும்பில் காண்பிக்கப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவராலயத்தின் கலாசார பிரிவு தெரிவித்தது.
இலங்கை திரைப்பட ரசிகர்கள் மத்தியில் ஈரானியத் திரைப்படங்களுக்கு உள்ள வரவேற்பை மற்றும் வேண்டுகோள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு கலாசார பிரிவு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதனடிப்படையில் ஒவ்வொரு மாதமும் முதலாவது மற்றும் இறுதி புதன்கிழமைகளில் இல. 06 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை கொழும்பு 07 உள்ள ஈரான் தூதரக கலாசார பிரிவிலேயே இந்த திரைப்பட காட்சிகள் சரியாக மாலை 5.30க்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இதன் முதலாவது திரைப்படக் காட்சி எதிர்வரும் டிசம்பர் 07ஆம் திகதி புதன்கிழமை மாலை 5.30க்கு ஆரம்பமாகும். இந்நிகழ்வில் இலங்கையின் சினிமாத்துறை பிரமுகர்கள், ஊடகவியலாளாகள் மற்றும் கலைஞர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த சினிமா காட்சிகளுக்கான அனுமதிகள் முற்றிலும் இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago