2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பஸ்ஸில் யுவதியின் காற்சட்டையை வெட்டியதாக நபரொருவர் மீது வழக்கு

Super User   / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட)

பஸ்ஸில் பயணம் செய்த யுவதியொருவரின் காற்சட்டையை பிளேட்டினால் வெட்டியதன் மூலம் அவருக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு ஏற்படுத்தியதாக நபரொருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கொள்ளுபிட்டியில் இச்சம்பவம் நடந்ததாக மேற்படி யுவதி கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் சாட்சியமளித்தார்.

பயணிகள் பலரின் முன்னிலையில் நடந்த இச்சம்பவத்தினால் தான் மிகுந்த அசௌகரியத்துக்குள்ளானதாக அப்பெண் தெரிவித்தார்.

மேற்படி சந்தேக நபரை கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்ததுடன் அந்நபர் பயன்படுத்தியதாக கூறப்படும் பிளேட்டையும் கைப்பற்றினார்.

இச்சந்தேக நபர் களுத்துறை வடக்கை வதிவிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெட்டப்பட்ட காற்சட்டையையும் சந்தேக நபர் பயன்படுத்திய பிளேட்டையும் நீதிமன்றத்தில் பொலிஸார் சமர்ப்பித்தனர்.
இவ்வழக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X