2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு நகரில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.என்.முனாஷா )

நீர்கொழும்பு நகரில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் தோன்றியுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் நீர்கொழும்பு மற்றும் சீதுவை பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிரித்துள்ளதாகவும், பாடசாலை மாணவன் ஒருவன் டெங்கினால் உயிரிழந்துள்ளதாகவும், வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

டெங்கினால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பை சேர்ந்த 50 நோயாளர்களும், சீதுவை பிரதேசத்தில் 40 நோயாளர்கள் வரையிலும் இதுவரை சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும், மழை நீர் தேங்கியிருக்கக் கூடிய இடங்கள் அதிகமாகக்  காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடம் டெங்கு காய்ச்சலினால் நீர்கொழும்பில் 5 பேர் மரணமானமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X