Super User / 2011 டிசெம்பர் 05 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
கொட்டாஞ்சேனையில் 55 வயதான வர்த்தகர் ஒருவர் நேற்று கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிறிஸ்டோபர் எனும் இவ்வர்த்தகர் ஜம்பெட்டா வீதியில் வைத்து வானொன்றில் வந்த இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இக்கடத்தலுக்கு எதிராக கொட்டாஞ்சேனையில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இதில் 300 இற்கும் அதிகமானோர் பங்குபற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கடத்தலுக்கு காரணம் என்னவெனத் தெரியவில்லை எனவும், அப்பகுதி குடியிருப்பாளர்களின் தகவலின்படி இவர் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸ்நிலையத்தில் வர்த்தகரின் குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
அண்மைக் காலத்தில், வரகாபொல, களனி, தெமட்டகொடை, ராகம பகுதிகளில் கடத்தல்கள் இடம்பெற்றதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
meenavan Tuesday, 06 December 2011 06:25 AM
பாதுகாப்பு செயலாளரே இது உங்கள் கவனத்திற்க்கு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago