A.P.Mathan / 2011 டிசெம்பர் 07 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் மாத்திரமே இலங்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம் என அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.
பிரிந்து வாழுகின்ற எண்ணம் எமது உள்ளங்களில் ஏற்படும்போது எம்மால் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க முடியாது என்பது உறுதி என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று புதன்கிழமை காலை கல்லூரி அதிபர் திருமதி வ.பரசுராமன் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 2007, 2008, 2009 ஆம் ஆண்டுகளில் கல்வி, கலை, மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் சான்றிதழ்கள், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)


1 hours ago
2 hours ago
2 hours ago
Kamal Thursday, 08 December 2011 01:02 PM
இலங்கை பேரினவாத துவேசத்தை தூண்டியவர்கள் இவர்கள் தான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago